யானை - மனித மோதலால் 40 பேர் உயிரிழப்பு
Anuradhapura
Sri Lanka
By Beulah
யானை - மனித மோதல் காரணமாக சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் வலய வனவிலங்கு காப்பாளர் டபிள்யூ.எம்.கே.எஸ்.சந்திரரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் அவர் அறியத்தருகையில்,
“குறித்த மோதலில் 83 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
உயிரிழப்புக்கள்
அநுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை இடம்பெற்ற யானை - மனித மோதல் காரணமாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதன்போது, 47 பேர் விசேட தேவையுடையோராக மாறியுள்ளதுடன், 710 வீடுகள் மற்றும் சொத்துக்கள் தேசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
49 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், 34 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்