சிறிலங்கா கடற்படையினரால் பல மில்லியன் மதிப்பிலான போதைப் பொருட்கள் மீட்பு!
சிறிலங்கா கடற்படையினரால் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் மூலமே நேற்று(23) இச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
கப்பலில் இருந்து 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சுமார் 212 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் (Crystal Methamphetamine) கைப்பற்றப்பட்டதுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்காக
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் (வயது 26 )மற்றும்( வயது 53) வயதுடைய தெவுந்தர மற்றும் கொட்டேகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், 2023 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 15,160 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.