கோர விபத்தில் ஸ்தலத்திலேயே பலியான 41 பேர் -மாலியில் துயரம்
accident
death
mali
By Sumithiran
பயணிகள் பேருந்து, கனரக பாரவூர்தி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றது.
Segou புறநகரில் பாரம் ஏற்றிக் கொண்டு சென்ற கனரக பாரவூர்தியின் டயர் வெடித்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற பேருந்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த பயங்கர விபத்தில் இரண்டு வாகனங்களும் உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும் விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி