தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட இலட்சக்கணக்கான சுவரொட்டிகள் நீக்கம்

Nihal Talduwa Sri Lanka Police Election Commission of Sri Lanka Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sathangani Sep 12, 2024 06:11 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட 04 இலட்சத்து 36 ஆயிரத்து 270 வரையான சுவரொட்டிகள் நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் (Colombo) நேற்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa)  இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினால் நாடு முழுவதும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நெருங்கும் ஜனாதிபதித் தேர்தல்: வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நெருங்கும் ஜனாதிபதித் தேர்தல்: வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நீக்கப்பட்ட சுவரொட்டிகள் 

1981ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமையவும் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவும் செயலாற்ற வேண்டும்.

இருந்தபோதும் ஒரு சில இடங்களில் சட்டங்கள் மீறப்படுவதை நாங்கள் கண்காணித்துள்ளோம். இதுதொடர்பான காவல்துறை கண்காணிப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட இலட்சக்கணக்கான சுவரொட்டிகள் நீக்கம் | 436270 Posters Removed Violation Of Election Rule

நேற்று முன்தினம் (10) 24ஆயிரத்து 114 சுவரொட்டிகள் காவல்துறையினரால் நீக்கப்பட்டுள்ளதுடன், 07ஆயிரத்து 890 வரையிலான சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

29 பதாகைகள் நீக்கப்பட்டுள்ளதுடன், 14 பதாகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 119 விளம்பர பதாகைகள் நீக்கப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக 110 விளம்பர பதாகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல், 181 அறிவித்தல்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், 48 அறிவித்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய, கடந்த மாதம் 17ஆம் திகதியிலிருந்து நேற்று முன்தினம் வரை நாடு முழுவதும் மொத்தமாக 04 இலட்சத்து 36 ஆயிரத்து 270 வரையான சுவரொட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 904 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!

முறைப்பாடு பதிவு

அதேபோன்று, ஆயிரத்து 218 பதாகைகள் நீக்கப்பட்டுள்ளதுடன், 870 பதாகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயிரத்து 220 விளம்பர பதாகைகள் நீக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 250 விளம்பர பதாகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 05ஆயிரத்து 605 வரையிலான அறிவித்தல்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், 09ஆயிரத்து 610 அறிவித்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் செயற்பாடுகளுக்காக 1,500 வரையிலான ஊழியர்கள் காவல்துறை திணைக்களத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். காவல்துறையினருடன் இணைந்து அவர்களே இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட இலட்சக்கணக்கான சுவரொட்டிகள் நீக்கம் | 436270 Posters Removed Violation Of Election Rule

இதற்கு மேலதிகமாக சட்டவிதிமுறை மீறல்கள் தொடர்பில் மொத்தமாக 304 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் குற்றச்செயல்கள் தொடர்பில் 84 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஏனையவை தேர்தல் சட்டவிதிமுறை மீறல்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளாகும்.

அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பில் கணினி குற்றத்தடுப்புப் பிரிவுக்கு ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களில் குறிப்பிட்ட ஒருவருக்கு மாத்திரம் உயிரச்சுறுத்தல் இருப்பதாக எந்தத் தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினூடாக அவர்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறான அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வுத் தகவல் கிடைத்தால் அதுதொடர்பில் நாங்கள் விரைந்து செயலாற்றுவோம்’’ என தெரிவித்தார்.

ரணிலின் பிரசாரக் கூட்டத்தில் மோதல் : களமிறக்கப்பட்ட கலகமடக்கும் காவல்துறையினர்

ரணிலின் பிரசாரக் கூட்டத்தில் மோதல் : களமிறக்கப்பட்ட கலகமடக்கும் காவல்துறையினர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024