மனித உடல் உறுப்புகளுடன் 45 பைகள் - காணாமல் போனோரை தேடிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி - மெக்சிக்கோவில் சம்பவம்
Mexico
By Vanan
மேற்கு மெக்சிக்கோவின் ஜலிஸ்கோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் குறைந்தது 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் காணாமல் போன 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் என 7 பேரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தடயவியல் ஆய்வு
இவர்கள் 7 பேரும் வெவ்வேறு நாட்களில் காணாமல் போயிருந்த பேதிலும், அவர்கள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தடயவியல் நிபுணர்கள் மனித உறுப்புகளின் அடையாளங்கள் குறித்து ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்
