20 வயது இளைஞனை அடிமையாக்கி தவறான முறைக்குட்படுத்திய பெண்: காவல்துறையில் முறைப்பாடு
20 வயது இளைஞனுக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அவனை அடிமையாக்கி தவறான முறைக்குட்படுத்தியதாக 46 வயதுப் பெண்ணொருவருக்கு எதிராக காவல்நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, களுத்துறை- வறக்காகொடப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியில் நீண்டகாலமாக வசித்து வந்த 46 வயதான திருமணமாகாத பெண் ஒருவர், தனது அயல்வீட்டில் வசிக்கும் க.பொ.த உயர்தரப்பரீட்சை இரண்டாவது தடவையாக தோற்றுவதற்கு தயாரான இளைஞன் ஒருவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
முறைப்பாடு
அத்தோடு, சந்தேகநபரான பெண் அந்த இளைஞனுக்கு ஐபோன் மற்றும் பல பரிசுப்பொருட்களை கொடுத்து அவனுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும், அந்த பெண்ணுடனான தொடர்பை நிறுத்துமாறு இளைஞனின் தாயார் தனது மகனை வற்புறுத்திய போதும் இளைஞனோ தாயார் மற்றும் சகோதரிகளையும் விட்டுவிட்டு அப் பெண்ணுடனேயே தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து தனது மகனை தன்னிடம் மீட்டுத் தருமாறு இளைஞனின் தாய் காவல்துறையில் முறையிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |