பிரித்தானியாவில் தமிழ் குடும்பத்தின் வீட்டில் சிங்கள அமைச்சரின் மகள்! நாடாளுமன்றில் அம்பலம்
தற்போதைய ஆளும் தரப்பில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவரின் மகள் தமிழ் புலம்பெயர் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கி பிரித்தானியாவில் உயர் கல்வி கற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினர் சில விடயங்களை வெளிப்படையாக கூற முயல்வதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் வெற்றி நிகழ்வு
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

புலம்பெயர் அமைப்பினருடன் அமைச்சர்கள் பழகுவதை நாங்கள் தவறு என்று கூறவில்லை.
ஆனால், அரசாங்கத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுடன் பழகும்போது, தாங்கள் இவர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும்.
இந்தத் தகவல் மூலமாக போர் வெற்றி நிகழ்வுகளுக்கு எந்த இடையூறும் விளைவிக்க விரும்பவில்லை. எனினும் இது வெளிப்படுத்த வேண்டியது.” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |