AK-74 எடுத்து விஜய்பாணி C.M சுழிபோடும் சுழியன்கள்
சிறிலங்கா தனது போர்வெற்றி நினைவு நிகழ்வை இன்றுமாலை நடத்திய நிலையில் புகலிடத் தமிழ் சமூகத்தில் பெருவகிபாகம் கொண்ட கனேடிய அரசியல் பரப்பில் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே மே 18 அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் அறிக்கையிடலில் சிறிலங்காவுக்கு மிகவும் சீற்றத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடிய இனப்படுகொலை என்ற சொல்லை பயன்டுபத்தப்பட்டிருப்பதால் இந்தவாரம் கொழும்பில் உள்ள கனேடிய தூதர் சிறிலங்ககா வெளியுறவு அமைச்சகத்துக்கு செல்லவேண்டியும் வரும்.
இந்த நிலையில் நேற்று முள்ளிவாய்க்காலில் பிரசன்னப்பட்ட மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் எலைன் பியர்சன் தெரிவித்த கருத்து முக்கியமானது. அதாவது இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலுக்காக அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளின் தோல்வியை பியர்சன் விமர்சித்திருக்கிறார்.
குறிப்பாக ஜெனிவா மனிதஉரிமைபேரவையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் தீர்மானங்கள் மட்டும் போதாது நடவடிக்கையும் வேண்டும் என அவர் விசனம் வெளியிட்டமை தமிழ்மக்களின் விடயங்களில் மேற்குலகில் காட்டப்படும் இரட்டை நிலைப்பாடுகளுக்கும் ஒரு ஆதாரம்.
இந்த பின்னணியில் தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியை தனது வடக்கின் முதலமைச்சர் கனவு அரசியலை நனவாக்கும் ஒட்சிசனைபெறுவதற்கு வடக்கின் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இந்த மே-18 ஐயும் பயன்படுத்தி தமிழகத்தில் ஓடித்திரிந்து திரும்பியுள்ளார்.
அர்ச்சுனாவின் தமிழக சுற்றிச்சுழல்களின் நோக்கம் வடமாகாண முதலமைச்சர் கனவு சார்ந்த சுழிகளாக தெரியும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |