யானைகளுக்கிடையே மோதல் : நடுவில் சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி : வைரலாகும் நெகிழ்ச்சியான காணொளி
இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நடுவில் சிக்கிய ஒரு பெண் துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துரதிஷ்டவசமான சம்பவம், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் காட்டு யானைகள் வசிக்கும் துபரே யானைகள் சரணாலயத்தில் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர், யானைகள் முகாமைப் பார்வையிட வந்த சென்னையைச் சேர்ந்த ஜொய்சி(வயது 33) சுற்றுலாப் பயணி என்று கூறப்படுகிறது.
யானைகளுக்கிடையே மோதல்
துபரே யானைகள் முகாமில் உள்ள'மார்த்தாண்டா' என்ற யானைக்கும் 'கஞ்சன்' என்ற யானைக்கும் இடையே இந்த மோதல் நிகழ்ந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨 Heartbreaking Dubare Tragedy:
— Public News X (@PublicNewsX) May 19, 2026
33-yr-old Joysi (Chennai) crushed to death when tusker Kanjan attacked Marthanda at the camp.
Her husband Joel, holding their baby in one hand, desperately tried pulling her out.
Marthanda critically injured. https://t.co/MUV0BB4mSW pic.twitter.com/ZLy7bIxUhM
இரண்டு விலங்குகளுக்கு இடையே நடந்த சண்டையின் நடுவில் உயிரிழந்த பெண்ணை, அவரது கணவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு காப்பாற்ற முயற்சிக்கும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |