ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் டொலர்கள்!
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மூலம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விடயத்தை தனது டுவிட்டர் சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட பதிவொன்றின் மூலம் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் 11.4 வீத அதிகரிப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
இதேவேளை, பெப்ரவரி மாதம் முதல் 8 நாட்களில் 60,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
இதன்படி இந்த ஆண்டு இதுவரை 268,375 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Worker remittences for the month of January 2024 amounts to 487.6 USD million. Increase in 11.4 % compared to year 2023.
— Manusha Nanayakkara (@nanayakkara77) February 10, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |