சமுக ஊடகங்களில்ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட ஐவர் சிக்கினர்
ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமு க ஊடகங்களில் வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களை பொலிஸ் கணனி குற்றப்பிரிவு விசாரித்து வருவதாகவும், அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், பிட்ட கோட்டையைச் சேர்ந்த 26 வயது இளைஞர், பூஜாபிட்டியாவைச் சேர்ந்த 23 வயது இளைஞன், கண்டி, பிலியந்தலவைச் சேர்ந்த 39 வயது நபர், இம்புல்கொட, கம்பஹாவைச் சேர்ந்த 31 வயது இளைஞன் மற்றும் ராஜகிரியவைச் சேர்ந்த ஒருவர் என ஐவர் அடங்குவர். சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தின்படி, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது தண்டனைச் சட்டம் மற்றும் ஆபாச வெளியீடுகள் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.