குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 50,000 நிதியுதவி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜனாதிபதி ஊடாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான குறுஞ்செய்திகள் தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
போலி செய்தி
இந்நிலையில், இவ்வாறான போலி செய்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |