பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள 50 ரஷ்ய உளவாளிகள். விடுக்கப்பட்ட எச்சரிக்கை

London United Russia Russo-Ukrainian War Ukraine
By Kiruththikan Jun 20, 2022 01:43 AM GMT
Report

ரஷ்ய அரச தலைவர் புடினின் கட்டளையை ஏற்று பிரித்தானியாவில் 50 உளவாளிகள் ஊடுருவியுள்ளதாகவும் குறித்த உளவாளிகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் சைபர் தாக்குதல்களை நடத்த தயாராக இருக்கும்படி இரகசிய உளவாளிகளுக்கு ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் அறிவுறுத்தியதாக MI5 சந்தேகம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தகவல்களைத் திருடும் உளவாளிகள்

பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள 50 ரஷ்ய உளவாளிகள். விடுக்கப்பட்ட எச்சரிக்கை | 50 Sleeper Agent Hiding In Britain

உக்ரேனிய ஆதாரவாளர்கள் மற்றும் ரஷ்ய எதிர்ப்பாளர்களை குறிவைத்து இராணுவத் தகவல்களைத் திருடவும் அந்த உளவாளிகள் முயற்சிப்பார்கள் என்று பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், தலைசிறந்த பாடசாலைகள் மற்றும் அரசுத்துறை உட்பட பிரித்தானிய சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ரஷ்ய உளவாளிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அரசுத்துறையில் ஊடுருவியுள்ள ரஷ்ய உளவாளிகள், தரவுகளை சேகரித்து ரஷ்யாவுக்கு அனுப்பி வைப்பதாக மூத்த உளவுத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுக்கு பகிரங்கமாக ஆதரவு

பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள 50 ரஷ்ய உளவாளிகள். விடுக்கப்பட்ட எச்சரிக்கை | 50 Sleeper Agent Hiding In Britain

மேலும், தற்போதைய சூழலில், பிரித்தானியாவில் ஊடுருவியுள்ள ரஷ்ய உளவாளிகளின் எண்ணிக்கை தொடர்பில் கணிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார் முன்னாள் இராணுவ உளவுத்துறை அதிகாரி Lt Col Philip Ingram.

நாம் பகிரங்கமாக உக்ரைனுக்கு ஆதரவளித்துவருவதால், ரஷ்ய உளவுத்துறை உக்கிரமாக பிரித்தானியாவில் செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்,

அரசுத்துறையில், பாதுகாப்புத்துறை மற்றும் தொழில்துறையில் அவர்கள் ஆட்களை நுழைத்திருப்பார்கள் என்பது உறுதி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, நான்கு ரஷ்ய உளவாளிகள் வெஸ்ட்மின்ஸ்டரில் செயல்படுகிறார்கள் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று அச்சம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் லண்டனின் கேட்விக் விமான நிலையம் ஊடாக பிரித்தானியாவில் இருந்து ரகசியமாக வெளியேற முயற்சித்த ரஷ்ய உளவாளி ஒருவர் சிக்கினார்.

ஹேமர்ஸ்மித் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மீது உளவு பார்த்ததாகவும் நாசவேலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025