தாமரைச் செல்வியின் எழுத்துலக வாழ்வில் 50 ஆண்டுகள் நிகழ்வு
Kilinochchi
Nothern Province
Srilankan Tamil News
By Kathirpriya
தமிழ்த்தாயின் நீடித்த நிலையான வாழ்வுக்காய் தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளை அர்ப்பணித்த தாமரைச்செல்வியின் பணியை பாராட்டும் நிகழ்வு இன்று (22) இடம்பெற்றுள்ளது.
இன்று (22) கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வெவ்வேறு நிலங்களில்
தாமரைச்செல்வி 50 ஆண்டுகளாக எழுதி வருகிறார், இந்த 50 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள், திருப்பங்கள் எல்லாம் நடந்துள்ளன, இந்த 50 ஆண்டுகளில் அவரும் வெவ்வேறு நிலங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
தனது இன்னலான காலங்களிலும் தமிழுக்கான தன் பணியை தொடர்ந்து செய்த தாமரைச்செல்வியின் படைப்புக்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வாகவே இந்த அரங்கு இடம்பெற்றது.

அவர் கிளிநொச்சியின் வரலாற்றையும் புனைவின் வழியே தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்