பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பமாகும்போது அதிகரிக்கப்போகும் பேருந்து சேவை
Bandula Gunawardane
Ranil Wickremesinghe
Sri Lankan Schools
By Sumithiran
மாணவர் பேருந்து சேவையில் மேலும் 500 பேருந்துகளை சேர்க்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremasinghe)விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன (bandula gunawardane)தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இரண்டாம் பாடசாலை தவணை தொடக்கம் மேலும் 500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர் பேருந்து சேவைக்கு விண்ணப்பித்துள்ள பல பாடசாலைகள்
நாட்டிலுள்ள பல பாடசாலைகள் மாணவர் பேருந்து சேவைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நாடளாவிய ரீதியில் 1500 பாடசாலை பேருந்துகள் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்