கனடாவில் பணிகளை இழக்கப்போகும் அரசாங்க ஊழியர்கள்
Government of Canada
Canada
World
By Laksi
கனடாவில் எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என நிதி அமைச்சரும், பிரதிப் பிரதமருமான கிறிஸ்டியா ப்ரிலாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்குறைப்பு தொடர்பான யோசனை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்குறைப்பு நடவடிக்கைகள்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பதவி விலகல்கள் மற்றும் ஓய்வு பெறுதல்கள் போன்ற சந்தர்ப்பங்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யாது ஆளணி வள எண்ணிக்கையை வரையறுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் 4.2 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்