இலங்கையில் வருடாந்தம் 5ஆயிரம் சிறுவர் சார்ந்த குற்றங்கள் பதிவு
இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பல குற்றச் செயல்களுக்கு போதைப்பொருள் பாவனை மற்றும் தொலைபேசிப் பாவனையே வழிவகுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் பிரச்சினை
''இலங்கையில் வருடாந்தம் சுமார் 5,000 சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பதிவாகுவதாக இந்த புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

போதைப்பொருள் பிரச்சினையே எமது நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதுடன் மற்றுமொரு மிகப்பெரிய காரணியாக சிறுவர் துஷ்பிரயோகமும் காணப்படுகின்றது.
இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பதிவாகும் சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும்.
தொலைபேசிப் பாவனை
இன்று கையடக்கத் தொலைபேசிகள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ளது.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைப்பதற்கு நாம் முயற்சி எடுத்தால், பெற்றோர்கள் கண்டிப்பாக வீட்டில் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்." என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்