இம்மாத இறுதியில் வேலையை இழக்கும் 5000 பேர்..! பலருக்கு காத்திருக்கும் நெருக்கடி
மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு நகரும் அபாயம் உள்ளதாக சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் தேசிய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆடைத்துறையில் உள்ள மூன்று தொழிற்சாலைகள் இம்மாதம் தொழிற்சாலைகளை மூடிவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அந்த மூன்று தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 5000 தொழிலாளர்கள் வேலையை இழப்பர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்கு செல்ல விரும்பும் ஊழியர்களை நிர்வாகத்திற்கு அறிவிக்குமாறு நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு மடங்குக்கு மேல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டமையினால் முதலீட்டாளர்களின் இலாபம் குறைந்துள்ளதாகவும், மின் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மேலும் அதிகரித்துள்ளமையினால் பயனற்றதாக கருதி இந்த நாட்டில் உள்ள தொழிற்சாலைகளை மூடிவிட்டு வேறு நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா
