செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா?

Sri Lankan Tamils Sri Lanka
By Theepachelvan Aug 14, 2026 08:21 AM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்  

எமது மாணவர்களுக்கு மிகுந்த சமூகப் பொறுப்பும் இனத் தார்மீகமும் இருக்கிறது. இந்த மண்ணில் தமிழ் மாணவர்கள் மாபெரும் இனப்படுகொலைகளை சந்தித்தமை நெடியதொரு வரலாறு. வாழ்வு பற்றிய கனவு பிசுபிசுக்கும் அவர்களின் குருதி இந்த மண்ணில் கறையாகப் படிந்திருக்கின்றது.

இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்களத்தில் மாணவர்கள் அணிதிரள்வதற்கு மாணவர்கள்மீதான படுகொலைகள் தூண்டுகோலாக இருந்தன.

பாடசாலைகள் மீதும் பள்ளி மாணவர்கள் மீதும் போரை தொடுக்கிற, குண்டுகளை கொட்டுகிற இனக்கொலை அரசின் இருண்ட பக்கங்களில் எங்கள் பெண் குழந்தைகளின் குருதியால் எழுதப்பட்டது செஞ்சோலை இனப்படுகொலை.

சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான்: ஹிரோஷிமா-நாகசாகி ஈழத்திற்குச் சொல்லும் பாடம்…

சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான்: ஹிரோஷிமா-நாகசாகி ஈழத்திற்குச் சொல்லும் பாடம்…

இருண்ட யுகத்தின் கொடுநாள்

ஒரே நாளில் ஒரு சில நிமிடங்களில் ஒருவரல்ல, இருவரல்ல 53 மாணவிகளை இனப்படுகொலைக்குப் பலிகொடுத்தது தமிழர் தேசம். சிங்களப் பேரினவாத்தின் இனக்கொலைப் பசிக்கு எங்கள் தேசத்தின் இளம் குருத்துக்களை வாரிக்கொடுத்த அந்த துயரத்தை மறக்க முடியாமல் நெஞ்சம் இன்றும் துடிக்கிறது.

செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? | 53 Female Students Killed At Sencholai

இனப்படுகொலையாலும் போராட்டத்தாலும் இளையவர்களின் குருதி சிந்திய இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் மண்ணுக்காகவும் அதன் மாண்புக்காகவும் வாழ்கின்ற பொறுப்பு இருக்கின்றது.

ஒகஸ்ட் 14, செஞ்சோலைப் படுகொலையின் நினைநாள்.  ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடு. 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14 ஆம் திகதி. வழக்கமான ஒரு பொழுதாக புலர்ந்தது.

நெஞ்சில் கனவுகளை சுமந்த பள்ளி மாணவிகள் முதலுதவிப் பரீட்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குழந்தைகள் கொன்று வீசப்பட்டனர்.

அந்த நாளே ஒரு இருண்ட யுகத்தின் நினைவுகள் போலத்தான் இருக்கின்றன. 2006 ஒகஸ்ட் 11 ஆம் திகதி சிங்கள அரசு வடக்கிற்கான பாதையை மூடி வடக்கை தனியொரு நாடாக துண்டித்து வலிந்த போரைத் தொடங்கியது.

அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!

அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!

பாடசாலைகள்மீது குண்டு வீச்சு

யாழ்ப்பாண மக்கள் பசியிலும் இருட்டிலும் துடித்த நாட்கள். சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம் ஏற்கனவே அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதாக சொல்லிக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் விமானததாக்குதல்களை சிங்கள அரசின் விமானப்படைகள் மேற்கொண்டு வந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும், விமானத்தாக்குதல்கள் பாடசாலைகளை அண்டியும் வீடுகள்மீதும் நடந்தன. எல்லாம் புலிகளின் முகாம்கள் என்றே அரசால் கூறப்பட்டது.

இதனை வெறுமே பதிவு செய்து கொண்டிருந்தது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு. தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் சர்வதேசத்தினாலும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினாலும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

கிருசாந்தி படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளே செம்மணி இனப்படுகொலை தினம்…!

கிருசாந்தி படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளே செம்மணி இனப்படுகொலை தினம்…!

இவர்களா பயங்கரவாதிகள்?

இதனால் ஒன்றல்ல இரண்டல்ல, 53 மாணவிகளை கொன்று கின்னஸ் சாதனை பதிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வெற்றி பெற்றது. உலகிலேயே ஒரே தடைவையில் அதிக பெண்கள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும்.

செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? | 53 Female Students Killed At Sencholai

உலகிலேயே அதிக மாணவிகள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக சிறுவர்கள் கொல்லப்பட்ட மனித விரோதச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வலயக் கல்வி அலுவலம் ஊடாக உரிய அனுமதி பெறப்பட்டு, தலைமைத்துவ அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நடாத்தப்பட்டது.

இப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்மீதுதான் சிங்கள அரசின் இன அழிப்பு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினர்.

இதில் சுமார் 50 மாணவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர் அத்துடன் சில மாணவிகள் வவுனியா வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தி, அவரிடம் பொய்யான வாக்குமூலங்களை பெற்றது சிங்கள அரச ஊடகம்.

மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை (2006): 20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட மனிதாபிமானப் பேரவலம்

மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை (2006): 20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட மனிதாபிமானப் பேரவலம்

மகிந்தவின் பதில்

இறுதியில் அந்த மாணவியையும் அங்கு வைத்து கொன்றது. இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜனாதிபதி, தமிழ் இனப்படுகொலை மகிந்த ராஜபக்ச அன்றே வெளிநாட்டில் இருந்து என்ன கூறினார் தெரியுமா? செஞ்சோலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? | 53 Female Students Killed At Sencholai

இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது.

நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம் என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலைமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிணைந்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள். இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு.

நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம் என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலைமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிணைந்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள். இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு.

இந்தியாவின் மை லாய் எனப்படும் வல்வெட்டித்துறைப் படுகொலை…

இந்தியாவின் மை லாய் எனப்படும் வல்வெட்டித்துறைப் படுகொலை…

வாய்மூடி இருந்த சர்வதேசம்

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன்.

அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன். பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர்.

காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். 

53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள்.

இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைதான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது.

நீதிக்காக ஏங்கும் நிலம்

கல்வி உரிமைக்காகப் போராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம். ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள்.

மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது.

இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை.

அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா? இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் இந்தப் படுகொலைக்கான நீதிக்காக ஏங்குகிறார்கள். அது அவர்களின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு குறித்ததும் ஆகும்.

இவைகளுக்கான நீதி முன்வைக்கப்படுகிற நாளித்தான்  இப்படுகொலையின் வடுக்கள் மறையக்கூடும். நினைவு கூர்தல் என்ற போராட்டத்தின் வழியாக செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு நீதியை அஞ்சலியாக்குவோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 14 August, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026