மன்னாரில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் மீட்பு!
மன்னார்- இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53,ஆயிரம் Pregabalin மருந்து வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமான பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுக்கும் நோக்கில் கரையோர மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வழமையான நடவடிக்கைகளின் போது இந்த கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறி லங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS புவனேகாவினால் இலுப்பைக்கடவை தடாகத்தில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் (STF) உதவியுடன் நேற்று(28) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
53 ஆயிரம் போதை மாத்திரைகள்
இந்த நடவடிக்கையின் போது, கடற்படை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இலுப்பைக்கடவை தடாகத்திற்கு அருகே உள்ள புதர்களில் சந்தேகத்திற்கிடமான பெட்டியை மீட்டனர்.
இதன் போது 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பைக்கடவை காவல்துறை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |