5.5 கோடி விசாக்கள் மீது ட்ரம்ப் அரசு எடுத்த அதிரடி முடிவு
5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை மதிப்பாய்வு செய்து வருவதாக அமெரிக்க (United States) வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இந்த மதிப்பாய்வில் யாராவது விசா விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், அவர்களின் விசா உடனடியாக ரத்து செய்யப்படும்.
மேலும், அவர்கள் அமெரிக்காவில் இருந்தால், அவர்களை நாட்டிலிருந்து நாடு கடத்தும் செயல்முறை தொடங்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விசா மதிப்பாய்வு
அனைத்து விசா வைத்திருப்பவர்களின் பதிவுகளும் உன்னிப்பாக சரிபார்க்கப்படும்.
விசா வழங்கப்பட்ட பிறகு அவர்களின் நடத்தையில் ஏதேனும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? அவர்கள் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்கிறார்களா? விசா காலாவதியான பிறகு நாட்டில் தங்குவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது, பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்பது அல்லது பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பது போன்ற பிரச்சினைகளை அதிகாரிகள் ஆராய்வார்கள்.
இதற்காக, விசா வைத்திருப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள், அவர்களின் சொந்த நாடுகளில் சட்ட அமலாக்க நிறுவனங்கள் வைத்திருக்கும் பதிவுகள் மற்றும் அமெரிக்காவில் அவர்களின் நடத்தை தொடர்பான அனைத்து விவரங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் அரசு
இது புதிய விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே விசா உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்குக்கும் அதிகமான விசாக்களை, குறிப்பாக மாணவர் விசாக்களை நான்கு மடங்கு அதிகமாக ரத்து செய்துள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து 6,000க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
