அமெரிக்கா - ஈரான் போருக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் இடையில் நான்கு முக்கிய தடைகள்

Donald Trump China Iran Middle East Russia
By Dharu Mar 04, 2026 04:54 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போரானது தற்போது நான்காவது நாளை கடந்துள்ளது.

ஈரான் நாட்டின் அணு நிலையங்கள், ஏவுகணை கட்டமைப்புகள் மற்றும் ஆட்சி தலைமை தொடர்பான இலக்குகள் இதனால் தாக்கப்பட்டன. இதன் பதில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க, பிரித்தானிய இராணுவதளங்களை நாசமாக்கின.

தற்போது மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களையும் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

அலி கமேனியை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் : மொசாட்டின் துல்லிய வேவு தகவல்கள் அம்பலம்

அலி கமேனியை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் : மொசாட்டின் துல்லிய வேவு தகவல்கள் அம்பலம்

மூன்றாம் உலகப் போர்

இதில் குறிப்பாக Hormuz வழித்தடத்தின் அச்சுருத்தலும், பொருளாதார நிலை தொடர்பான கவலைகளும் அதிகரித்துள்ளன.

அமெரிக்கா - ஈரான் போருக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் இடையில் நான்கு முக்கிய தடைகள் | Four Major Obstacles Between Worldwariii

சில அரசியல் விமர்சகர்கள் இதை “மூன்றாம் உலகப் போர்” என ஒப்பிட்டனர். ஆனால், அந்த ஒப்புமை சாத்தியமற்றதல்ல என்றாலும், அதன் நிகழ்தகவை மிகைப்படுத்துகிறது என பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிராந்திய மோதல் உலகளாவிய போராக மாறுவதைத் தடுக்க கட்டமைப்பு அடிப்படையிலான நான்கு முக்கிய தடைகள் காணப்படுகின்றன.

இதனை ஆய்வாளர்கள் “Four breakers“ என சுட்டிக்காட்டுகின்றனர். இந்த தடைகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் அவை நிரந்தர உத்தரவாதம் அல்ல என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

மோதலின் மையம் என்ன?

இரு தரப்பும் நேரடி இராணுவத்தை விட, அரசியல் அடித்தளங்களையே குறிவைத்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானின் ஆட்சித் தக்கவைப்பு திறன், அணு திட்டம், தலைமை ஒருமைப்பாடு மற்றும் IRGC தரப்புக்கள் ஆகியவற்றை மையமாகக் காண்கின்றன.

அமெரிக்கா - ஈரான் போருக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் இடையில் நான்கு முக்கிய தடைகள் | Four Major Obstacles Between Worldwariii

அணு நிலையங்கள், உயர்மட்ட தலைமையகம் மற்றும் IRGC கட்டளை மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஆட்சியின் செயல்திறனை முறியடிக்க நோக்கமுடையவை எனக் கருதப்படுகின்றன.

மாறாக, ஈரான் அமெரிக்காவின் வளைகுடா முன்னணி தளவமைப்புகள் - கட்டார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் உள்ள தளங்கள் - மற்றும் கூட்டணித் தொடர்புகளை இலக்காகக் கொண்டுள்ளது.

வளைகுடா தலைநகரங்களைத் தாக்குவது, அமெரிக்க கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு! அமெரிக்கா - சீனா எரிசக்தி அரசியலில் புதிய திருப்பம்

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு! அமெரிக்கா - சீனா எரிசக்தி அரசியலில் புதிய திருப்பம்

உச்ச அழுத்த யுக்தி

IRGC “எந்த சிவப்பு கோடும் இல்லை” என்ற அறிவிப்பு, அரசியல் ரீதியாக போரைத் தாங்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லும் உச்ச அழுத்த யுக்தியாக மதிப்பிடப்படுகிறது.

இருப்பினும், இரு தரப்புக்கிடையிலான கடுமையான பழி-பகைச் சுழற்சி உலகப் போராக மாற வேண்டிய அவசியமில்லை.

அமெரிக்கா - ஈரான் போருக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் இடையில் நான்கு முக்கிய தடைகள் | Four Major Obstacles Between Worldwariii

இது உலகப் போராக மாற வேண்டுமெனில் , மூன்று நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடந்தால் மட்டுமே அது சாத்தியமாகலாம்.

ஹோர்முஸ் நீண்டகாலமாக மூடப்பட்டு, வளைகுடா எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு சீன –அமெரிக்க மோதல் தீவிரமாதல்.

ஈரான் அணு ஆயுத உற்பத்தி நிலையை அடைந்து, பரவல் தடுப்பு ஒப்பந்தம் முறிவடைவது. அமெரிக்க படைகள் மத்திய கிழக்கில் ஈடுபட்டிருக்கும் வேளையில், சீனா தாய்வானில் நகர்வு மேற்கொள்வது.

அல்லது ரஷ்யா நேட்டோ எல்லையில் சோதனை முயற்சி செய்வது.

இவை ஒன்றிணைந்தால் மட்டுமே பிராந்தியப் போர் உலகளாவிய மோதலாக உயர வாய்ப்பு உள்ளது.

ஈரானில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

ஈரானில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

நான்கு தடைகள்

1. பொருளாதார சுயநலம்

ஹோர்முஸ் வழியாக சீனா தனது வளைகுடா எரிசக்தியின் சுமார் 60% இறக்குமதி செய்கிறது. உலகளாவிய எரிசக்தி சந்தை சீர்குலைந்தால், அதனால் சீனாவுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும். இதே தர்க்கம் வளைகுடா எரிசக்தியைச் சார்ந்த அனைத்து பெரிய பொருளாதாரங்களுக்கும் பொருந்தும்.

2. கட்டாய கூட்டணி இல்லாமை

2026 ஜனவரியில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான மும்முனை ஒப்பந்தம், பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கையாக இல்லை. 1914-இல் இருந்த கட்டாய இராணுவ ஒப்பந்தங்கள் போன்று தானாகப் போரைத் தூண்டும் அமைப்பு இதில் இல்லை.

3. அணு தடுப்பு:

அணு ஆயுதப் பயன்பாடு குறித்து எச்சரிக்கை நிலை உயர்ந்தாலும், நேரடி உயிர் அச்சுறுத்தல் இல்லாமல் எந்த நாடும் அணு மோதலைத் தொடங்காது என்ற தடுப்பு தர்க்கம் இன்னும் நிலவுகிறது.

4. திருத்தவாத சக்திகளின் உட்கிளவு

ரஷ்யா உயர்ந்த எரிசக்தி விலைகளை விரும்புகிறது. சீனா நிலைத்த விலைகளை விரும்புகிறது. வளைகுடாவில் ஈரானின் ஆதிக்கம், சீனாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கே சவாலாகும். எனவே இவை 1940-ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த அச்சு சக்திகளைப் போன்றவை அல்ல. சலுகை அடிப்படையிலான கூட்டணிகள் மட்டுமே.

இந்த மோதல் எரிசக்தி சந்தைகள், அணு பரவல் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச கூட்டணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

ஆனால் ஒரு பிராந்தியப் போர் தானாகவே உலகப் போராக மாறிவிடாது. இப்போது கேள்வி, “உலகம் முடிவதா?” என்பதல்ல. இந்த நான்கு பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் சோதனைக்கு உள்ளாகும் முன், போரை நிறுத்துவதற்கான தூதரக முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதே முக்கியம்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026