கொழும்பில் 500 இற்கும் மேற்பட்ட ஆபத்தான பாரிய மரங்கள் கண்டுபிடிப்பு
Colombo
Sri Lankan Peoples
By Dilakshan
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 100 வருடங்கள் பழமையான 558 ஆபத்தான மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
330 ஆபத்தான மரங்கள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் , 558 மரங்கள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டதாகவும் அவற்றில் 214 மரங்கள் கொழும்பு மாநகர சபையினால் அகற்றப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மற்றைய நகரங்களுடன் ஒப்பிடுகையில் 100 வருடங்களுக்கு மேல் பழமையான மரங்கள் கொழும்பில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
பாதுகாக்கும் முயற்சி
இந்நிலையில், இந்த மரங்களை பாதுகாக்கும் முயற்சியில் அவற்றின் கிளைகளை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி