56 பேராசிரியர்கள் பணிநீக்கம் :பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு
6 பேராசிரியர்கள் ஒரே தடவையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த மேற்படி பேராசிரியர்களே பணநீக்கம் செய்ப்பட்டவர்களாவர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தகுதியில்லாத பேராசிரியர்கள்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக சில பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து தகுதியில்லாமல் பணியில் சேர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்த 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு போதிய தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்த 56 பேராசிரியர்களை அதிரடியாக துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
இது குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இந்த தகவல் அண்ணாமலை பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.