மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை: சாணக்கியன் அதிரடி

Sri Lankan Tamils Batticaloa Shanakiyan Rasamanickam
By Shadhu Shanker Aug 02, 2024 11:15 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை என  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiyan Rasamanickam ) தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் நிதி எனக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு(Batticaloa)  எருவில் பொது நூலகத்திற்கு புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (01.08.2024) இடம்பெற்றது.இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்… மட்டக்களப்பு மக்கள் மட்டக்களப்பு அபிவிருத்தி அடையும் என நம்பி இரண்டு இராஜாங்க அமைச்சர்களை உருவாக்கி விட்டனர். அதனை இன்று மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

வங்குரோத்து நிலையிலிருந்து மீள நாட்டின் தலைவரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் : சஜித்

வங்குரோத்து நிலையிலிருந்து மீள நாட்டின் தலைவரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் : சஜித்

ஜனாதிபதியின் விசேட நிதி

கிராமங்களுக்கு கட்டாயம் அவசியமான வாசிகசாலையை ஒப்பிடும் போது புத்தகங்கள் குறைவாக காணப்படுகின்றன. மட்டக்களப்பில் பாரிய நூலகம் ஒன்றை உருவாக்குவோம் என கூறியவர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் கீழுள்ள பொது நூலக கட்டடத்திலலுள்ள ஒன்று கூடல் மண்டபம் முழுவதும், புத்தகங்களால் மூடிகாணப்படுகிறது.

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை: சாணக்கியன் அதிரடி | 596M Fund Approved For Batticaloa Projects

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் நிதி எனக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மாத்திரம் ஏன் ஜனாதிபதி விசேட நிதி வழங்கினார் என கேட்பவர்களும் உள்ளார்கள். நான் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியிடம் எதுவும் கேட்கவில்லை.

நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காதவர்கள் ஏதோ ஒன்றை ஜனாதிபதியிடம் தங்களுக்காகப் பெற்றுள்ளார்கள். என்னிடம் கேட்டதற்கிணங்க மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு கேட்டதற்கிணங்க 596 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதில் முதற்கட்டமாதக 400 மில்லியன் நிதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிதி மக்களின் பொது அபிவிருத்திட்டங்களுக்கு பகிரப்பட்டு வருகின்றன. எருவில் கிராமத்தின் பொது மைதானத்திற்கு 5.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்குடன் நாம் இருக்கின்றோம்.

போட்டியை சமனில் முடித்த இலங்கை அணி: இறுதியில் தடுமாறிய இந்தியா

போட்டியை சமனில் முடித்த இலங்கை அணி: இறுதியில் தடுமாறிய இந்தியா

அரசியல் தீர்வு 

ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் எனக்கு நிதி ஒதுக்கீட்டினை வழங்க வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியின் காரியாலயத்தில் நித்திரை கொள்ளாத குறையாக திரிகின்றனர். மைதான புனரமைப்புக்கு என 160 மில்லியன் இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது ஆனால் அந்த நிதியில் மின் விளக்குகள் மாத்திரம்தான் பொருத்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளதாக நாம் அறிகின்றோம்.

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை: சாணக்கியன் அதிரடி | 596M Fund Approved For Batticaloa Projects

குறிப்பாக மட்டக்களப்பை சிங்கப்பூராக மாற்ற போறேன் என்று கோஷமிட்டு வந்து திரியும் இராஜாங்க அமைச்சர்களே உள்ளனர். இதற்கான பாடத்தை இனி வரும் தேர்தலில் மக்கள் புகட்ட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களுக்காக நாம் குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

எருவில் பாடசாலைக்கு அருகில் நாம் அண்மையில் உழவர் சிலை ஒன்றை திறந்து வைத்தோம் ஆனால் இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் புத்தர் சிலையை கொண்டு வைக்க கூடியவர்கள் அவ்வாறு புத்தர் சிலையை வைத்தால்தான் அவர்களுக்கு மதுபானசபை அனுமதிப்பத்திரங்கள் இன்னும் கிடைக்கும். என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024