ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (28) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மிகத் தீவிரமான நிலநடுக்கம்
கடலுக்கு அடியில் 41 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஹச்சினோஹே நகரம் மற்றும் புடாய் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக உணரப்பட்டன.

கடந்த ஜூன் 25 அன்று இதே இவதே கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6+ என்ற மிகத் தீவிரமான நிலநடுக்கம் ஏற்பட்டதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் பாறைச் சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜப்பானியப் பிரதமர்
இது குறித்து ஜப்பானியப் பிரதமர் சனாயே தகைச்சி (Sanae Takaichi) தனது சமூக ஊடகப் பக்கத்தில், சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜூன் 25 நிலநடுக்கத்தின் போதே பிரதமரின் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அவசரகால முகாமைத்துவப்பிரிவு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சேத விபரங்களை விரைவாகக் கண்டறிந்து மக்களுக்குத் துல்லியமான தகவல்களையும் உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்