சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு- அங்கொட மருத்துவமனையிலிருந்து நோயாளர்கள் தப்பியோட்டம்
சுகாதார ஊழியர்கள் தற்போது முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பினால் அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளர்கள் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும், அவர்கள் தொடர்பில் நேற்று (10ஆம் திகதி) வரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டொக்டர் தம்மிக்க விஜேசிங்க சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
அங்கொட வைத்தியசாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 40 விடுதிகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நாட்களில், தாதியர், சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையை பயன்படுத்தி ஆறு பேர் மருத்துவமனையில் இருந்து தப்பினர்.
அவர்களால் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில், அவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அங்கொட வைத்தியசாலைக்கோ அறிவிக்குமாறு வைத்தியசாலை கோரியுள்ளது.
தப்பியோடிய 6 பேர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அவர்களை காவல்துறையிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் அல்லது அவர்களின் அடையாளம் தெரியாமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
