பாம்பு தீண்டியதால் பலியான 6 மாதக் குழந்தை காத்தான்குடியில் சோகம்!
Batticaloa
By Kathirpriya
ஆறு மாதக் குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் ஒன்று நேற்று (24) அதிகாலை மட்டக்களப்பு காத்தான்குடி காவல்நிலைய பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத வயதை கொண்ட ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவியுள்ளது
பற்றிமாபுரத்தில் உள்ள வீட்டில் வெற்றுத்தரையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நேற்று (24) அதிகாலை 3.30 மணியளவில் பாம்பு தீண்டி இருப்பதாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 12 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்