தீவிரமடையும் செம்மணி அகழ்வு நடவடிக்கை!
யாழ் (Jaffna) செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக ஆறு எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வு நடவடிக்கை இன்று (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை 11 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 43 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 52 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஆறு எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 218 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரையில் 235 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




