அதிகரிக்கும் அதிவேக நெடுஞ்சாலை விபத்துகள் ! வெளியானது காரணம்
கடந்த 26 நாட்களில் நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த ஆண்டு (2023) அதிவேக நெடுஞ்சாலைகளில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது வீதிகளில் வாகனங்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணாமையே பல விபத்துக்களுக்கு காரணம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை இடமாறல்களில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான வீதி விளக்குகள் செயலிழந்துள்ளமையினால், அப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது.
மேலும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இரகசியமான முறையில் மின்சார கம்பிகளை அறுத்து இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |