உக்ரைன்-ரஷ்யா போர் : ஆறு இலங்கையர்கள் உயிரிழப்பு
Russo-Ukrainian War
Sri Lankan Peoples
Ukraine
Russia
By Laksi
உக்ரைன்(Ukraine) மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான(Russia) போரில், இதுவரை ஆறு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து மனித கடத்தல்காரர்களால் அனுப்பப்பட்ட 6 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்