ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கி பிரயோகம் - துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது - காவல்துறை அதிகாரி தெரிவித்தது!
ஆசிரியை ஒருவர் மீது 6 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம், அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் உள்ள ரிக்நெக் எனும் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியை அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் உச்சம் பெற்றதனால், மாணவன் ஆசிரியை மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
மாணவனுக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? இதன் பின்னணி என்ன? சம்பவத்தில் வேறு யாராவது தொடர்பில் உள்ளனரா? என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்காவின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் காரணமாக குறித்த ஆரம்ப பாடசாலைக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
