மகிந்த உயிருக்கு ஆபத்து...! பொய் பிரசாரம் செய்யும் எதிர்க்கட்சி : சாடும் அமைச்சர்

SLPP Mahinda Rajapaksa President of Sri lanka National People's Power - NPP Ananda Wijepala
By Sathangani Dec 15, 2024 04:37 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பிற்காக 60 காவல்துறையினரும் 231 முப்படையைச் சேர்ந்தவர்களும் தற்போது உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சியினர் அதனை மறைத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று பொய்யான பிரசாரங்களைச் செய்து மக்களை திசை திருப்புவதற்கான சூழச்சியை முன்னெடுப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு குறைக்கப்படுவது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவது உறுதி : சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு

தமிழரசுக்கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவது உறுதி : சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு

குறைக்கப்பட்ட 116 பேர் 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதிகளில் எந்த ஒருவரினதும் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு அறிக்கைகளின் பிரகாரம் காவல்துறையினரே தீர்மானம் எடுக்கின்றார்கள். அந்த தீர்மானங்களில் கடந்த கால ஆட்சியாளர்கள் போன்று நாங்கள் தலையீடுகளைச் செய்வதில்லை.

மகிந்த உயிருக்கு ஆபத்து...! பொய் பிரசாரம் செய்யும் எதிர்க்கட்சி : சாடும் அமைச்சர் | 60 Police 231 Tri Forces For Mahinda S Security

அந்த வகையில் காவல்துறையினர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 176 காவல்துறையினரில் 116 பேரை குறைத்து 60 பேரை வழங்கியுள்ளனர்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதிக்கு இராணுவத்தைச் சேர்ந்த 64 பேர் உள்ளடங்கலாக 231 முப்படைகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்காக இன்னமும் உள்ளனர்.

ஆனால் அந்த விடயத்தினை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மறைத்துவிடுகின்றார்கள். மக்களை திசைதிருப்பும் சூழ்ச்சியுடன் தான் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சஜித் தரப்பின் அறிவிப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சஜித் தரப்பின் அறிவிப்பு

காவல்துறையினரே தீர்மானிப்பவர்கள்

அதேநேரம், அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் பொதுக்கொள்கையொன்றையே கொண்டிருக்கிறது. நாட்டின் தேசிய பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றபோது தனி நபர்களுக்கான பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவிடமுடியாது.

மகிந்த உயிருக்கு ஆபத்து...! பொய் பிரசாரம் செய்யும் எதிர்க்கட்சி : சாடும் அமைச்சர் | 60 Police 231 Tri Forces For Mahinda S Security

அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் கூட இன்னமும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பெற்றுக்கொள்ளாத நிலையில் உள்ளனர்.

ஆகவே, எம்மைப் பொறுத்தவரையில் எமது அரசாங்கத்தில் அரசியல்வாதிகள் பாதுகாப்பு விடயத்தில் தலையீடுகளைச் செய்வதில்லை. அதனை காவல்துறையினரே இறுதி செய்கின்றார்கள்.

ஆகவே, அரசாங்கத்தின் மீது அரசியல் நோக்கத்துக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது “ என தெரிவித்தார்.

அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து சிறீதரன் எம்.பி அளித்த பதில்!

அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து சிறீதரன் எம்.பி அளித்த பதில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025