மகிந்தவின் மலசல கூடத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கிய சிறிலங்கன் எயார்லைன்ஸ்..! பகிரங்கப்படுத்தினார் சரத் பொன்சேகா

Parliament of Sri Lanka Mahinda Rajapaksa Namal Rajapaksa Sarath Fonseka
By Kanna Sep 23, 2022 01:13 AM GMT
Report

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் பாரிய பங்கை கொண்டிருக்கின்றது என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

நாமலின் காரியாலயத்தில் பணியாற்றிய பெண்

மகிந்தவின் மலசல கூடத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கிய சிறிலங்கன் எயார்லைன்ஸ்..! பகிரங்கப்படுத்தினார் சரத் பொன்சேகா | 600 Crore Allocated To Bulid A Toilet For Mahinda

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் சிறிலங்கன் எயார்லைன்சில் பணிப்பாளராக இருந்த போது 50 இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்பட்டது. இதற்கு பினனர் வந்த ஒருவருக்கு 100 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இளைப்பாரிய இராணுவ அதிகாரி ஒருவர் செயற்பாட்டு பணிப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவாக செலுத்தப்பட்டது.

நாமல் ராஜபக்சவின் காரியாலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் சிறிலங்கன் எயார்லைன்சில் பணிப்பெண்ணாகவும், பணியாற்றி வருமானங்களை திரட்டி வந்தார்.

அதேநேரம், கடந்த 2010 ஆம் ஆண்டளவில் முன்னாள் சிறிலங்கன் மகிந்த ராஜபக்சவிற்கு சிறிலங்கன் எயார்லைன்சில் மலசலகூடம் ஒன்றை நிர்மாணிக்க 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் அது நல்லாட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.

600 கோடி ரூபாய் செலவில் ஒரு மலசலகூடம் நிர்மாணிக்கப்படுமாக இருந்தால் அதில் தங்கத்தினாலான உதிரிப்பாகங்களே பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாடகமாகவே அமையும்

மகிந்தவின் மலசல கூடத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கிய சிறிலங்கன் எயார்லைன்ஸ்..! பகிரங்கப்படுத்தினார் சரத் பொன்சேகா | 600 Crore Allocated To Bulid A Toilet For Mahinda

நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். போராட்டங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்து செயற்பட்டனர்.

மோசடிகளுக்கு எதிராக போராட்டங்கள் மூலமே தீர்வுகளை காணமுடியும் என அவர் குறிப்பிட்டார். கசிப்பு விற்பனை செய்தாவது நாடாளுமன்றத்திற்குள் வரும் பலர் பொது மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை.

இந்த நிலையில், போராட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டு நிராயுதபானியான விடுதலை என பெயரிட வேண்டும்.

அத்துடன், இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறான நிலையிலேயே நாட்டில் மோசடியற்ற நிலையை கொண்டுவர முடியும்.

தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் அவசரமாக கொண்டுவரகூடிய விடயமல்ல.

அது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது. எனினும் தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்", எனக் குறிப்பிட்டார். 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011