நீண்ட தூர பயணங்களுக்கு 600 சொகுசு பேருந்துகள்: அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கை போக்குவரத்துச் சபையின் நீண்ட தூர பயணத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கி உள்ளது.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
2026 அரச முதலீட்டுத் திட்டத்தில் 600 சாதாரண பேருந்துகளை வாங்க ரூ.14.4 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.
புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்
ஆனால், புதிய சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துக்கு உயர்தர வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்துகளை வாங்குவது சிறந்தது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சாதாரண வகைப் பேருந்துகளுக்குப் பதிலாக, தற்போதுள்ள வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்குள் 600 சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்