யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 22 கைதிகள் விடுதலை
76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலைகளில் இருந்து விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில் 754 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளைய தினம் 729 ஆண் கைதிகளும் 25 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அந்தவகையில், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 22 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
22 கைதிகள் விடுதலை
விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள் சிறு குற்றங்கள் புரிந்து, நீதிமன்றங்களில் தண்ட பணம் செலுத்தாத குற்றச்சாட்டுகளால் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட 22 கைதிகள் நாளை காலை 9.15 க்கு விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, அண்மையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |