மன்னாரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியப் பதிவு!
மன்னாரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் காணாமலாக்கப்பட்டோர் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்று (24-04-2026) இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அலுவலக பிரதிநிதிகள்
இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கலந்துகொண்டதோடு காணாமல் ஆக்கப்பட்டோரின் நூற்றுக்கணக்கான உறவினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மன்னாரில் இதுவரை காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக 612 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவற்றில் 427 விண்ணப்பங்களுக்கான பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவற்றுக்கான இடைக்கால நிவாரணம், காணாமல் போனதற்கான சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ் என்பவற்றை வழங்கியுள்ளதாகக் காணாமலாக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 மேலதிக தகவல் - Nayan
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்