பாகிஸ்தானிலிருந்து வந்த கப்பலில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பொருள்(படங்கள்)
64 கோடியே 77 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 கிலோ 193 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கொழும்பு துறைமுகத்தில் நேற்று (06/22) சுங்க அதிகாரிகள் குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக துறைமுக கட்டுப்பாட்டு பிரிவு சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
கடந்த 06/15 ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து "வைட் ஜூலியட்" என்ற கப்பல் மூலம் குளிரூட்டப்பட்ட கொள்கலனில் குறித்த ஹெரோயின் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கொழும்பு இறக்குமதியாளரின் முயற்சி

கொள்கலனை துறைமுகத்திற்கு கொண்டு வந்த கொழும்பு இறக்குமதியாளர், உடனடியாக கொள்கலனை மீண்டும் பாகிஸ்தானின் கராச்சிக்கு திருப்பி விடுவதற்கு தயாராகியுள்ளார்.
ஆனால் கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அதற்கு முன்னதாகவே கொள்கலனை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள், கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயினை கைப்பற்றியுள்ளனர்.
மூவர் கைது

தற்போது, இந்த ஹெரோயின் கையிருப்பு இறக்குமதியில் ஈடுபட்ட கொழும்பு பகுதியில் வசிக்கும் மூவரை கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளும் உதவியிருந்த நிலையில், தற்போது இந்த ஹெரோயின் கையிருப்பு மற்றும் சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
pictures -ADA
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 19 மணி நேரம் முன்