நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 64 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு
Nigeria
World
By Shalini Balachandran
நைஜீரியாவில் (Nigeria) படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவில் ஜம்பாரா (Jimbaran) மாநிலத்திலுள்ள ஒரு ஆற்றிலேயே இவ்வாறு படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு நைஜீரியாவில் ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக நாளாந்தம் ஆற்றினை கடந்து செல்வதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
விவசாய பணி
இந்தநிலையில், 70 பேர் படகில் சென்ற போது திடீரென ஆற்றில் கவிழ்ந்ததில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும், ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 13 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்