பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸில் (Philippines) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுனாமி அலைகள் உருவாகலாம்
ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 10 அடி வரை சுனாமி அலைகள் உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
