கணக்கியல் துறை சார்ந்த படிப்பிற்கு சிறந்த நாடுகள் எவையென்று தெரியுமா..!
கணக்கியல் என்பது வயிக பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்தல், வகைப்படுத்தல், மற்றும் அறிக்கையிடல் போன்றவற்றை கணக்கியல் துறை சார்ந்த படிப்பில் நாம் மேற்கொள்ள முடியும்.
இக்கல்வி முறைமையை வெளிநாட்டில் தொடர விரும்பினால் அதனை எங்கு படிக்கலாம் என்று இப்பதிவின் மூலமாக அறிந்துக்கொள்வோம்.
மலேசியா
ஒரு பல்லின, பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு ஆகும். குறிப்பாக, கடல் சேவைகள் மற்றும் கடல்சார் வணிக துறையில் முதன்மையி்ல் இருக்கும் இந்த நாட்டில் கணக்கியல் கல்வியை மிகச்சிறப்பாக தொடர முடியும்.
நியூசிலாந்து
கணக்கியல் துறை சார்ந்த படிப்புகளுக்கும், கணக்கியல் துறை சார்ந்த பணிகளுக்கும் பெயர் பெற்ற நியூசிலாந்து நாட்டில், படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயர்லாந்து
கணக்கியல் துறையில் முதன்மையில் இருக்கும் நாடுகளில் ஒன்றான அயர்லாந்து நாட்டில் மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், அந்நாட்டை தவிர்த்த மற்ற பல நாடுகளிலும் பணி செய்வதற்கான வாய்ப்பை பெறுகின்றனர்.
தென்னாபிரிக்கா
புகழ்பெற்ற கணக்கியல் அமைப்பு, நிதித்துறை நிறுவனங்கள் நிறைந்த ஒரு நாடாக தென்னாபிரிக்கா பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நாட்டில் மாணவர்கள் தங்கள் படிப்பை படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
சிங்கப்பூர்
நிதித்துறையில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் நாட்டில், கணக்கியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, அதிக ஊதியத்துடன் பணியும் கிடைக்கிறது.
ஐக்கிய அரபு அமிரகம்
ஐக்கிய அரபு அமிரகம் சிறந்த வாழ்க்கை தரம், வேலை வாயப்புகளுக்கு பெயர் பெற்ற நாடாகும். அதேநேரம், கணக்கியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு ஏற்ற நாடாகவும் இது உள்ளது.
உருமேனியா
பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான உருமேனியா நாட்டில் கணக்கியல் துறை சார்ந்த படிப்புகளை படிப்பது, மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
கனடா
கனடாவில், கணக்கியல் துறை சார்ந்த படிப்புகளை படிப்பது, மாணவர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்யக்கூடியாதாக அமையும்.