பிரான்சின் தென்பகுதியில் தீ விபத்து - 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!
France
Killed
Fire
Southern
Explosion
Grocery store
By MKkamshan
பிரான்சின் தென்பகுதியில் உள்ள மளிகைப்பொருட்கள் விற்பனையக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் இருவரை காணவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில் நேற்று (14) அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ பரவி அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனினும் எரிவாயு கொள்கலன்களின் வெடிப்பே இதற்கான காரணம் என்று
சந்தேகிக்கப்படுகிறது.
