இந்திய பெருங்கடலில் பயணித்த 2 கப்பலில் சிக்கிய 7 தொன் போதைப்பொருள்!
United Kingdom
India
By Pakirathan
இந்தியப் பெருங்கடல் வழியாக இரு கப்பல்களில் கடத்தப்பட்ட 7 தொன் போதைப் பொருளை பிரித்தானிய கடற்படை கைப்பற்றியுள்ளது.
எச்.எம்.எஸ் லான்காஸ்டர் என்ற பிரித்தானிய கப்பலானது அமெரிக்கக் கடற்படையுடன் இணைந்து இந்தியப் பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் சந்தேகத்திற்கிடமாக சென்ற ஒரு கப்பலை மடக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மதிப்பு
அதில் 3 ஆயிரத்து 500 கிலோ ஹாஷிஷ், ஹெரோயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அடுத்த சில மணி நேரத்திற்குள் மற்றொரு கப்பலிலும் இருந்து தொன் கணக்கில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 10 மில்லியன் யூரோக்கள் எனக் கூறப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்