மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்த 7 வயது சிறுவன் பலி!
அம்பாறை - ஆலையடிவேம்பில் மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து 7 வயது சிறுவர் ஒருவன் உயிரிழந்துள்ளார்
. ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் நேற்று (29) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரவிக்குமார் லதீஸ் எனும் சிறுவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடிதண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் குறித்த பகுதியில் மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் நிரம்பும் நீரை அவ்வப்போது சில தேவைகளுக்காகச் சிறுவனின் குடும்பம் பயன்படுத்தியுள்ளது.
சிறுவனின் சடலம்
இதனை அவதானித்துள்ள அந்தச் சிறுவனும் அந்தக் குழியில் யாரும் அவதானிக்காத நேரத்தில் நீரை அள்ள முயற்சித்துள்ளார். இதன்போது குறித்த சிறுவன் குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளாதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மரணமடைந்த சிறுவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
