எரிசக்தி அமைச்சருக்கு அரசுக்குள் வலுக்கும் நெருக்கடி
எரிசக்தி அமைச்சர் குமாரஜய கொடி பதவிவிலக வேண்டும் என சிரேஷ்ட அமைச்சரவை உறுப்பினர்கள் கோரி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, 2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் ரூ. 8 மில்லியன் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராவதை தொடர்ந்து, அவர் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.
நீதிமன்றில் வழக்கு தொடர திட்டம்
சர்ச்சைக்கு மேலதிகமாக, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் குமார ஜயக்கொடிக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர உள்ளன.
எனினும், ஜனாதிபதி, குமார ஜயக்கொடியை பதவி விலக வேண்டும் என இன்னும் கேட்கவில்லை.
அவர் பதவி விலக வேண்டும்
என்றாலும், மூத்த அமைச்சரவை உறுப்பினர்கள் விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவர் அவ்வாறு பதவி விலக எந்த திட்டமும் இல்லை என்று கூறுகின்றன
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
