புடினின் DNA-வை குறிவைக்கும் அமெரிக்கா...! வலிமையான பிம்பத்தைத் தக்கவைக்கும் ரஷ்யா
சர்வதேச அரசியலில் வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவும் உளவுப்போர், தற்போது ஒரு தலைவரின் உயிரியல் தரவுகளைப் பாதுகாக்கும் அளவிற்குத் தீவிரமடைந்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்த ரகசியங்கள் அமெரிக்க உளவு அமைப்புகளிடம் கிடைத்தால் அது அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என ரஷ்யா கருதுகின்றது.
எதிரி நாடுகள் ஒரு தலைவரின் டி.என்.ஏ (DNA) அல்லது கழிவுகளைப் பகுப்பாய்வு செய்து, அவரது பலவீனங்களைக் கண்டறிவதைத் தடுக்கவே ரஷ்யா இத்தகைய மிகத்தீவிர பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகின்றது.
குறிப்பாக உக்ரைன் போர் சூழலில், ஜனாதிபதியின் ஆரோக்கியம் தொடர்பான சிறு தகவல் கசிந்தாலும் அது உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகின்றது.
இது வெறும் பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமல்லாமல் உலக அரங்கில் தனது பலவீனத்தை மறைத்து ஒரு வலிமையான தலைவர் என்ற பிம்பத்தைத் தக்கவைப்பதற்கான ரஷ்யாவின் ஒரு அரசியல் வியூகமாகும்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |