யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல்
யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாக முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், நாகை - காங்கேசன் துறை கப்பல் சேவை வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் கடலில் சீற்றம் மற்றும் கன மழை பெய்தது.
கப்பல் சேவை
புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன் துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது. இந்நிலையில் காங்கேசன் துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறையிலான கப்பல் சேவை மூன்றரை மாதங்களுக்கு பின் வரும் 18ஆம் திகதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது.
இந்த முறை நாகப்பட்டினம் - காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவையின் போது பயணிகள் அதிகம் செல்லும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |