ராஜபக்சர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடையாது! அடித்துக்கூறும் தென்னிலங்கை தரப்பு
ஜனாதிபதியாக பதவி வகிக்கக் கூடிய சாத்தியங்கள், தற்போதைய மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கிடையாது என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய வரலாறு தற்பொழுது குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ராஜபக்ச குடும்பத்தின் அரசியலை மக்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது. நாமல் ராஜபக்சசை ஜனாதிபதியானால் புதிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படும் கருத்துக்கள் நகைப்பிற்குரியவை.
ராஜபக்ச - ரணில்
குறிப்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டும் தீவிர சேறு பூசல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.

பெண்களை இழிவு படுத்தக்கூடிய வகையில் ராஜபக்ச - ரணில் விக்மரமசிங்க மிக இழிவான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் கல்வி அரசியல் அமைப்பு நடவடிக்கைகள் திறந்த வெளிப்படை தன்மையுடன் கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கல்வி வணிக மயப்படுத்தப்படுவதனை வன்மையாக கடுமையாக எதிர்ப்பதாகவும், குறிப்பாக பாடசாலைகளை மூடும் திட்டம் ஏற்புடையது அல்ல.” எனவும் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |