யாழில் புற்று நோயினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
யாழ் மாவட்டத்தில் புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் புற்று நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் புற்று நோயினால் கடந்த வருடம் (2023) 71 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்திய கலாநிதி யமுனானந்தா மேலும் கூறியுள்ளார் .
இது தவிரவும், யாழ் மாவட்டத்தில் 776 பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பழக்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை உரிய வகையில் மேற்கொள்ளும் போது இந்த புற்று நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சுய பரிசோதனை
30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஏதேனும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாட வேண்டும் எனவும் யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |