ஹிக்கடுவை கடற்கரையில் 71 வயது வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு
ஹிக்கடுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கபட்டுள்ளது.
நேற்று (15.11.2026) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், நீரில் மூழ்கிய வெளிநாட்டுப் பிரஜையைப் பிரதேசவாசிகள் மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
பலப்பிட்டிய வைத்தியசாலை
உயிரிழந்தவர் 71 வயதுடைய ஜேர்மன் நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |